Home » » தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டாது -ஜாதிக ஹெல உறு­ம­ய

இந்­தியா மற்றும் மேற்­கு­லக நாடு­க­ளுடன் இணைந்து ஈழத்தை உரு­வாக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டாது என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

உள்­நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க வெளியார் தலை­யி­டக்­கூ­டாது என்று தெரி­விக்கும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆலோ­ச­க­ராக செயற்­படும் மன்னார் மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப்பு ஆண்­ட­கைக்கு எதி­ராக எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்­கப்­போ­கின்றார் என்றும் அமைச்சர் ரண­வக்க கேள்­வி­யெ­ழுப்­பினார்.

வடக்கு கிழக்கு பிரச்­சி­னைக்கு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வைக் காண்­ப­தற்­காக அர­சாங்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேர­டி­யாக பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்­க­வேண்டும் என்றும் உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களில் வெளியார் தலை­யி­டக்­கூ­டாது என்றும் கத்­தோ­லிக்க ஆயர் பேரவை தெரி­வித்­துள்­ளமை குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறி­ய­தா­வது
உள்­நாட்டுப் பி்ரச்­சி­னையில் வெளி­யாரின் தலை­யீடு இருக்­கக்­கூ­டாது என்று ஆயர் பேரவை தெரி­வித்­துள்­ளது. அவ்­வாறு தெரி­விப்­ப­தற்கு முன்னர் இந்த உள்­நாட்டு விவ­கா­ரத்தை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தி­வரும் ஆயர் பேர­வையில் அங்கம் வகிக்கும் மன்னார் மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப்பு ஆண்­ட­கைக்கு எதி­ராக கர்­தினால் தலை­மை­யி­லான ஆயர் பேரவை என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்று வின­வு­கின்றோம்.

யுத்­தத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது மக்கள் கொல்­லப்­பட்­ட­தாக மன்னார் மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப்பு ஆண்­டகை தெரி­வித்­துள்ளார். கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையின் ஆயர் ஒருவர் இவ்­வாறு தெரி­விக்­கும்­போது சர்­வ­தேசம் அதனை தவ­றாக புரிந்­து­கொள்ளும். எனவே உள்­நாட்டுப் பிரச்­சி­னையை மன்னார் மாவட்ட ஆயரே சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்தி வரு­கின்றார்.

அது­மட்­டு­மல்ல மன்னார் மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப்பு ஆண்­டகை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் ஆலோ­ச­க­ராக செயற்­பட்­டு­வ­ரு­கின்றார். இது தொடர்பில் ஆயர் பேர­வையின் நிலைப்­பாடு என்ன என்­ப­தனை உட­ன­டி­யாக அறி­விக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

மல்கம் ரஞ்சித் ஆண்­டகை முதலில் தனது வீட்டில் உள்ள பிரச்­சி­னையை தீர்க்­க­வேண்டும். அதன் பின்னர் நாடு குறித்து அவர் பேசலாம்.
 
இதே­வேளை இந்­தியா மற்றும் மேற்­கு­லக நாடு­க­ளுடன் இணைந்து ஈழத்தை உரு­வாக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யாது. கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தமது தாயகப் பிர­தேசம் என்றும் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
இவ்வாறான கொள்கையையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. உண்மையில் பார்க்கப்போனால் கூட்டமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றார்.

ரமணன் 
 

0 comments to "தேசியக் கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தக்­கூ­டாது -ஜாதிக ஹெல உறு­ம­ய"

Leave a comment

Powered by Blogger.