Home » » பெண் பிரதமருடன் ஒட்டிக்கொண்டு படம் பிடித்த ஒபாமா - விமர்சிக்கும் பத்திரிகைகள்

நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்வின்போது, டென்மார்க் நாட்டுப் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில், சோகமான சூழ்நிலையில், அப்படியாக மூவரும் ஒட்டிக்கொண்டு தமது கைபேசியிலேயே படம்பிடித்துக்கொண்டது, பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.
பெண்ணான டென்மார்க் பிரதமருடன் ஒபாமாவும், கேமரெனும் ஒட்டிக்கொண்டு படம் பிடிப்பதை, ஒமாபாவின் மனைவியான மிஷேல் ஒபாமா கோபத்துடன் பார்ப்பது போன்ற பாவனையில் ஒரு படத்தை வெளியிட்ட சில பத்திரிகைகள் அதிபர் ஒபாமா தனது மனைவியிடம் வாங்கிக்கட்டப் போகிறார் என்று கேலி செய்திருந்தன.
இன்னுமொரு பத்திரிகையோ ஒபாமாவின் மனைவி இதனை வெறுப்புடன் பார்த்ததாகக் கூறியுள்ளது.
இருந்தபோதிலும், அந்த நினைவஞ்சலி நடந்த விளையாட்டரங்கில் தென்னாப்பிரிக்க மக்கள் மண்டேலாவின் மரணத்தை ஆடல், பாடல்களுடன் கொண்டாடியே தமது அஞ்சலியை செலுத்தினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments to "பெண் பிரதமருடன் ஒட்டிக்கொண்டு படம் பிடித்த ஒபாமா - விமர்சிக்கும் பத்திரிகைகள்"

Leave a comment

Powered by Blogger.