Home » » ஏலத்தில் வந்த கலைப்பொருட்கள் மீண்டும் பழங்குடியினருக்கே தரப்படுகின்றன

அமெரிக்கவின் இரண்டு பழங்குடியினங்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட புனிதமானதாகக் கருதப்படும் கலைப்பொருட்களை பிரான்ஸில் ஐந்து லட்சம் டாலர்களுக்கும் மேலான விலை கொடுத்து ஒரு ஏலத்தில் வாங்கிய லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து இயங்கும் ஒரு அற நிறுவனம்,இந்தப் பொருட்களை அந்த பழங்குடியினங்களுக்கே திரும்பக் கொடுத்துவிடப்போவதாகக் கூறுகிறது.
இந்த முகமூடிகள் ஹோப்பி என்ற பழங்குடியின மக்களின் மூதாதையர்களின் ஆவியைப் பிரதிபலிப்பவை என்றும், அவை விற்கப்படக்கூடாது என்றும் அந்த மக்களுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஏலம் நடப்பதைத் தள்ளிவைக்க, அமெரிக்க அதிகாரிகளும், சுதேசி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு அமைப்பும் முயன்றன.
ஆனால் பிரான்ஸில் இந்த ஏலம் நடப்பது சட்டபூர்வமானதுதான் என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த முகமூடிகள் மிகவும் அழகானவை, சக்திமிக்கவை என்று ஆனன்பெர்க் அறக்கட்டளையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறினார். ஆனால் இவை வீடுகளின் வரவேற்பறைகளில் அலங்காரப்பொருட்களாக வைக்கக் கூடிய வெற்றிச்சின்னங்கள் அல்ல என்றும், அவை , அவைகளின் சரியான உடமையாளர்களுக்குத் திரும்ப சேர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஹோப்பி இன கலாசாரத் தலைவரான , சாம் டெனகொன்ங்வா, தனது சமுதாய மக்களுக்கு இது ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறினார்.

0 comments to "ஏலத்தில் வந்த கலைப்பொருட்கள் மீண்டும் பழங்குடியினருக்கே தரப்படுகின்றன"

Leave a comment

Powered by Blogger.