Home » » சென்னை திரைப்பட விழாவுக்கு வரும் அமீர்கான்

சென்னை, டிச.11 (டி.என்.எஸ்) சென்னையில் நாளை தொடங்க உள்ள 11வது சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அவருடன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.

சென்னையில் 8 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா மட்டும் மல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விழாவின் தொடக்க நாளின்போது தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மற்றும், நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

குமரன் இந்தியா

0 comments to "சென்னை திரைப்பட விழாவுக்கு வரும் அமீர்கான்"

Leave a comment

Powered by Blogger.