Home » » பாக்யராஜுக்கு ஜோடியாகும் சுவேதா மேனன்

நிஜ பிரசவக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய, பிரபல மலையாள கவர்ச்சி நடிகை சுவேதா மேனன், மீண்டும் தமிழில் நடிக்கிறார்.



'சிநேகிதியே', 'நான அவன் இல்லை 2', 'அரவான்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவேதா மேனன், சமீபத்தில் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். 

இந்நிலையில், இவர் மீண்டும் தமிழில் நடிக்க முன்வந்துள்ளார். இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இயக்கும் 'துணை முதல்வர்' என்ற படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து கூறிய சுவேதா மேனன், "பாக்யராஜ் படங்களில் சில படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்கள் குடும்பப்பாங்கான கதை கொண்டவையாக இருக்கும். இப்போது அவர் ஜோடியாக 'துணை முதல்வர்' என்ற படத்தில் நடிக்கிறேன்.

இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கிளாமரானதா என்பது பற்றி தெரியாது. பாக்யராஜ் படங்களுக்கு குடும்பப் படம் என்ற முத்திரை இருக்கிறது. அதற்கேற்ப இந்த படத்தில் எனது கதாபாத்திரமும் அமைந்திருக்கும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் தொடங்குகிறது. 

குமரன் இந்தியா

0 comments to "பாக்யராஜுக்கு ஜோடியாகும் சுவேதா மேனன்"

Leave a comment

Powered by Blogger.