Home » » யாழ்.பல்கலைக்கழகத்தில் மண்டேலாவுக்கு அஞ்சலி


யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஊர்வலமாக கைலாசபதி கலையரங்குக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு உரைகள் இடம்பெற்றன.

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் செயலாளர் இராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், கல்விசாரா ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜெயக்குமார், மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோரின் உரையும் மாணவர்களின் கவிதைகளும் இடம்பெற்றன.
 
இதேவேளை இந்த அஞ்சலி நிகழ்வின்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments to "யாழ்.பல்கலைக்கழகத்தில் மண்டேலாவுக்கு அஞ்சலி"

Leave a comment

Powered by Blogger.