Home » » இந்த ஆண்டின் சிறந்த மனிதர் பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸிஸ் 'டைம்' பத்­தி­ரிகை தெரிவு

கடந்த ஒன்­பது மாதங்­க­ளாக ரோமன் கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையின் தலை­வ­ராக இருக்கும் பாப்­ப­ரசர் பிரான் ஸிஸ்இ மனச்­சாட்­சியின் புதிய குர­லாக உரு­வெ­டுத்­துள்ளார் என்றும் அந்தப் பத்­தி­ரிகை கூறு­கி­றது.
 
மிகக் குறு­கிய காலத்தில், சர்­வ­தேச அர ங்கில் புதி­தாக நுழைந்த ஒருவர் இந்த அள­வுக்கு விரை­வாக கவ­னத்தை ஈர்ப்­பது மிகவும் அபூர்­வ­மா­னது என்று அப்­பத்­தி­ரி­கையின் நிர்­வாக ஆசி­ரியர் நான்சி கிப்ஸ் தெரி­வித்­துள்ளார்.
 
வறுமை, செல்வம், உல­க­ம­ய­மாதல் மற்றும் இதர முக்­கிய மான விஷ­ய ங்கள் குறித்த விவா­தங்­களில் பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் தன்னை மையப்­ப­டுத்­தி­யுள்ளார்.
 
இந்த ஆண்டு மார்ச் மாதம் கர்­தி­னால்கள் குழு­வொன்றால் பாப்­ப­ர­ச­ராக தேர்வு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் அவர் போனஸ் ஏரிஸ் நகரின் பேரா­ய­ராக இருந்தார்.

0 comments to "இந்த ஆண்டின் சிறந்த மனிதர் பாப்­ப­ரசர் முதலாம் பிரான்ஸிஸ் 'டைம்' பத்­தி­ரிகை தெரிவு"

Leave a comment

Powered by Blogger.