Home » » திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை உருவாகியுள்ளது. திருமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று காலை ஏற்பாடு செய்திருந்தனர்.





இதன்போது அங்கு வந்த சிலர் மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவிடாது தடுத்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் பதாகைகளை பிடுங்கி கிழித்தெறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலகக் குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.எனினும் தற்போது நிலமை சமரசம் செய்யப்பட்டு ஆர்ப்பாட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதல் நிலையில் காயமடைந்த ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதல் நடந்த இடத்தில் பொலிஸார் இருந்த போதும் தமக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மக்கள் தெரிவித்தனர்.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 30-40 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதன்போது முகத்தை மூடிக் கொண்டு வந்த 30 ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தை குழப்பி கலகத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments to "திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை "

Leave a comment

Powered by Blogger.