மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வரலாறு, இந்நாட்டு மக்களுக்கு தரும் படிப்பினைகளின் பின்னணியில் இந்நாட்டு சிங்கள, தமிழ் மக்களின் மனசாட்சிகள் உரையாடும் நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் 16ம் திகதி திங்கட்கிழமை பௌர்ணமி விடுமுறை தினத்தன்று காலை 9.30 மணிக்கு, ஜ.ம.மு தலைவர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட செயற்குழு ஏற்பாடு செய்துள்ள மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கான இந்த அஞ்சலி மற்றும் உரை நிகழ்வில், சிங்கள பௌத்த மக்களின் ராஜகுருவாக கருதப்படும் கோட்டே ரஜமகா விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரரும், வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், இந்நாட்டு இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான பி. பி. தேவராஜும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சாந்தி சச்சிதானந்தமும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
சிங்கள-தமிழ் மக்களின் அபிலாஷைகள் பரஸ்பரம் எடுத்து கூறப்படவேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் கொள்கையின் அடிப்படையில் ஏற்பாடாகியுள்ள, பயன்தரும் இந்நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தலைநகர தமிழ் பேசும் மக்களுக்கு ஜ.ம.மு இன் கொழும்பு மாவட்ட செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜ.ம.மு இன் உப செயலாளர் சண். குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, மகளிர் இணைய செயலாளர் நந்தினி விஜயரத்தினம் ஆகியோர் செய்து வருகின்றனர்.




0 comments to "மண்டேலா வரலாற்று பின்னணியில் வடக்கும், தெற்கும் சந்திக்கும் நிகழ்வு"