கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் நைரேபி நகருக்கு அருகில் உள்ள நசராணி நகரின் சர்வதேச விளையாட்டுத் திடலில் இன்று நடைபெற்ற கென்யாவின் 50 வது சுதந்திர தின விழாவில் கலந்து அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
சுதந்திரதின கொண்டாட்டங்கள் உஹ_ரு பூங்காவில் கென்ய ஜனாதிபதி உஹ_ரு கென்யாட்டாவினால் கொடியேற்றப்பட்டு ஞாபகார்த்த மரம் நடப்பட்டு ஆரம்பமானது.
இந்த சுதந்திரதின கொண்டாட்டங்களில் நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜொனதன் நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒபசஞ்சோ, மாலாவியின் ஜனாதிபதி ஜொய்ஸ் பண்டா, தன்சானியா ஜனாதிபதி ஜகாயா கிக்வீட், கொங்கோ ஜனாதிபதி ஜோசப் கபீலா, எரிட ரியாவின் ஜனாதிபதி இஸ்ஸாயாஸ் அபவெர்க்கி ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு ஆபிரிக்கத் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதற்பெண்மணியும் பங்குபற்றினர்.









0 comments to "கென்யாவின் 50வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி"