ஆயிரம் ரூபாய் போலி தாளை வங்கியில் வைப்பில் இட முயற்சித்த ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறிப்பிட்டத் ஒரு தொகை பணத்தை
மஸ்கெலியா அரச வங்கி ஒன்றில் குறித்த நபர் தனது கணக்கில் வைப்பிலிட சென்றுள்ளார். பின் இவரால் வைப்பிலிடப்பட்ட பணத்தாள்களை வங்கி ஊழியர்கள் பரிசீலித்துப் பார்த்த போதே அதில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு முறையிட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் சில காலங்களாக ஆயிரம் ரூபா போலி தாள் காணப்படுகின்றது இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




0 comments to "போலி நாணயத்தாளை வைப்பிலிட முயற்சித்த நபர் கைது"