புதன்கிழமை மாலை தொடங்கிய தொடருந்துப் போக்குவரத்து வேலை நிறுத்தத்தால் இன்று காலை தொடருந்துப் போக்குவரத்து மிகவும் மோசமாக முடங்கிப் போயுள்ளது.
இது நாளை வெள்ளிக்கிழமை காலை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக RER B யின் போக்குவரத்து 4:1 என்ற விகித்தத்தில் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.
பல தொடருந்து நிலையங்களில் கடும் குளிரின் மத்தியிலும் மக்கள் தொடருந்துக்காக காவல் காத்துக்கொண்டு நின்றனர்.
RER- B யின் சேவை PARIS NORD வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Eurostar ,Thalyஆகியவையும் இத்தாலிக்கான கடுகதிச் சேவையும் சாதாரணமாக இயங்குகின்றன. ஆனால் சுவிற்சர்லாந்து செல்லும் Lyria அதிவேகத் தொடருந்து தொடருந்து 10ற்கு 7 என்ற விகிதத்திலேயே இயங்குகின்றன.







0 comments to "கடும் குளிருக்குள் சிக்கித்தவிக்கும் பயணிகள் -தொடரும் தொடருந்து வேலை நிறுத்தம் "