Home » » சிம்புவின் படத்துக்கு தடை கேட்டு வழக்குத்தாக்கல்

காமெடி நடிகர் விடிவி கணேஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் இங்க என்ன சொல்லுது. அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். சிம்புவும் ஆண்ட்ரியாவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை வடபழனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் கோர்ட்டில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை நந்தனத்தை சேர்ந்த நீலகண்டன் என்ற கணேஷ் (விடிவி கணேஷ்) என்னிடம் 2 லட்சம் கடன் வாங்கினார். அதற்கு அவர் கொடுத்த வங்கி காசோலை பணம் இல்லாமல் திரும்பி விட்டது. நேரில் கேட்டதற்கு வழக்கு எதுவும் போட வேண்டாம் திருப்பித் தந்து விடுகிறேன் என்றார். இப்போது எனக்கு பணத்தை திருப்பி தராமல் இங்க என்ன சொல்லுது என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார். என் பணத்தை திருப்பி கொடுக்காமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும், என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். படத்தின் தயாரிப்பாளர் 2 வாரத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

0 comments to "சிம்புவின் படத்துக்கு தடை கேட்டு வழக்குத்தாக்கல்"

Leave a comment

Powered by Blogger.