Home » » மண்டேலா உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபரும், கருப்பின தலைவருமான, நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலிக் கூட்டம், நேற்று நடைபெற்றது. ஜோகன்னஸ்பர்கில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில், உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.















தென் ஆப்பிரிக்காவில், கருப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட, நெல்சன் மண்டேலா, 95, நெடுங்கால சிறை வாசத்திற்குப் பின், அந்நாட்டின் முதல் அதிபரானார். இன வெறிக்கு எதிராக, அகிம்சை முறையில் போராடிய மண்டேலா, அந்நாட்டின் தந்தையாக போற்றப்படுகிறார். ஐந்து ஆண்டு ஆட்சி செய்த பின், தன் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்த அவர், அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு, சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். 

இவரின் அமைதி வழிப் போராட்டம் மற்றும் இன வெறிக்கெதிரான கொள்கைகளை பாராட்டி, இந்திய அரசு, நாட்டின் மிக உயரிய விருதான, பாரத ரத்னா வழங்கி கவுரப்படுத்தியது. கடந்த 5ம் தேதி மண்டேலா காலமானார். உலகத் தலைவர்களின் பார்வைக்காகவும், நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தவும், மண்டோலாவின் உடல், ஜோகன்னஸ்பர்கில் உள்ள பிரமாண்ட விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

மண்டேலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, 53க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், தென் ஆப்ரிக்காவில் நேற்று ஒன்று கூடினர். அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் பலரும், நேற்று, மண்டேலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ramanan south afirica

0 comments to "மண்டேலா உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி"

Leave a comment

Powered by Blogger.