அமெரிக்க 'ஸ்பேஸ் எக்ஸ்' கம்பனியானது தென் ஆசியப் பிராந்தியத்துக்கான தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குவதற்கான செய்மதியை செவ்வாய்க்கிழமை இரவு ஏவியுள்ளது.
'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ஏவுகணை மூலம் 'எஸ். ஈ.எஸ்.–8' வர்த்தக விண்கலம் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.
இந்த விண்கலத்தை ஏவுவதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரு முயற்சிகள் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக தோல்வியைத் தழுவியிருந்தன.
இந்த விண்கலம் பூமத்திய ரேகைக்கு கிழக்கே 50 பாகையில் சுமார் 36000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொள்ளவுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட செய்மதிகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேவைகளை செயற்படுத்தி வருகிறது.




0 comments to "ஆசிய பிராந்தியத்துக்கு தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் விண்கலம்"