கண்டி போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் இன்று பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச ஊழிர்களுக்கு ஐந்து நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. ஏனைய இரு நாட்கள் வேலை செய்தால் மேலதிக கொடுப்பணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் எமக்கு ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதாகவும் மேலதிக கொடுப்பணவுகள் எல்லைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 180 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடமை புரிந்தவர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்பட
வில்லை என்றும் 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் பிரகாரம் தமக்கு தரவேண்டி மீதி பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
அத்துடன் தமது அடிப்படைச்சம்பளம் சுமார் 11000 ஆக இருப்பதாகவும் இது
அதிகரிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்த அவர்கள் இன்னும் பல தொழிற்சங்க
நடவடிக்கைகள் தொடர்பாக தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர்.
16 தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இவ் ஆர்பாட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட வைத்தியசாலை ஊழிர்கள் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 comments to "வைத்தியாசலை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்"