கடந்த சில வாரங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் படம் ரிலீசானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ஃபிளாப் ஆனது. இதனால் அதன் தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாவுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நிறுவனம் அந்தப் படத்தில் தங்களுக்கு 35 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் அதில் பாதித் தொகையை செல்வராகவனிடம் இருந்து வசூலித்து தரவேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியிருக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறியிருப்பதாவது: இரண்டாம் உலகம் பட தயாரிப்பு தரப்பிலிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளது. படத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் 35 கோடி. செல்வராகவனின் நடவடிக்கையை கண்காணித்த தயாரிப்பு நிறுவனம் அவருடன் ஒரு புதிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது. படத்தில் நஷ்டம் வந்தாலும், லாபம் வந்தாலும் சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம். அந்த அடிப்படையில் செல்வராகவன் தயாரிப்பாளருக்கு 17.5 கோடி கொடுத்தே ஆகவேண்டும். இந்த ஒப்பந்தம் தவறான முன்னுதாரணமாக இருந்தாலும். இதற்கு செல்வராகவன் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
இவ்வாறு கேயார் கூறியுள்ளார்.




0 comments to "இரண்டாம் உலகம் படத்தால் 35 கோடி நஷ்டம்: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்"